விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராகவும், நடிகராகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவராகவும் இருக்கும் மாகாபா ஆனந்த், சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ மூலம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அவர் தனது சொகுசு காரிற்கு ஒரு பிரபல பெட்ரோல் நிறுவனத்தின் பங்கில் டீசல் நிரப்பிய நிலையில், அதில் தண்ணீர் கலந்திருந்ததால் கார் பழுதடைந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
மாகாபா ஆனந்த் வெளியிட்ட வீடியோவில், தனது காரிற்கு வழக்கம் போல நம்பிக்கையுடன் டீசல் நிரப்பியதாகவும், அதன்பின் காரின் செயல்பாட்டில் கடுமையான பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது, " டீசல்ல தண்ணி கலந்ததால கார் ரிப்பேராகி 3 லட்சம் செலவாகிடுச்சு. இத ஆதாரத்தோட நிரூபிச்சதும் கோர்ட்டுக்கு போயிடாதீங்க, 80 ஆயிரம் தர்றோம்னு பேரம் பேசுறாங்க. உங்கள நம்பி தான் வர்றோம். ஆனா இப்படி பண்ணா டீசலையும் இனி மக்களே தயாரிக்கணுமா? இந்த பங்க் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு.." என்று கூறியுள்ளார் மாகாபா.
அவர் வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!