• Dec 26 2024

எனக்கும் நிறைய பிரச்சினை நடந்து இருக்கு.. திடீரென குண்டை தூக்கிப் போட்ட சிம்ரன்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பூதாகரமாக கிளம்பிய ஹேமா கமிட்டி அறிக்கையால் பல்வேறு பிரச்சனைகள் தற்போது வரையில் நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது மலையாளத்தில் மட்டுமில்லாமல் தெலுங்கு, தமிழ் என அனைத்து சினிமா துறைகளிலும் இது பற்றிய குற்றச்சாட்டுகள்  முன் வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இது போன்ற சீர்கேடுகள்  நடைபெறவில்லை என்று கூறினாலும் தற்போது பல நடிகைகளும் தங்களுக்கு இடம்பெற்ற துன்புறுத்தல்கள் பற்றி மனம் திறக்க ஆரம்பித்து உள்ளார்கள். எதையும் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் தாமும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை ஆணித்தரமாக முன் வைத்து வருகின்றார்கள்.

எனினும் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் இது பற்றி வாய் திறக்க மறுத்துள்ளார்கள். சமீபத்தில் ரஜினிகாந்த், கார்த்தி, ஜீவா, விஷால் போன்றவர்களிடம் இது பற்றி வினோவிய போது நழுவிச் சென்றதை அவதானிக்க முடிந்துள்ளது. 

இந்த நிலையில், 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பலரின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை சிம்ரன் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.


அதாவது தானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானதாக கூறிய சிம்ரன், ஒரு பெண்மீது பாலியல் வன்முறை நடத்தப்படுகின்றது என்றால் உடனே ஏன் வெளியே சொல்லவில்லை என்று கேட்கின்றார்கள். இது ஒரு கேள்வியா? அது எப்படி உடனே சொல்ல முடியும். 

சில நேரங்களில் நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொள்ளவே நேரம் தேவை.  பொறுமையாக நாம் உட்கார்ந்து யோசித்துதான் அதற்கு ரியாக்ட்  கொடுக்க முடியும். அதற்கு அவகாசம் உங்களுக்கும் தேவை. 

என்னிடம் அப்படி தவறாக பேசினால் 100% உடனடியாக அப்போதே என் எதிர்ப்பை தெரிவித்து விடுவேன். சின்ன வயதிலிருந்தே நான் இந்த மாதிரியான பிரச்சினைகளை நிறைய முறை சந்தித்துள்ளேன். ஆனால் என்னால் இப்போது அதையெல்லாம் சொல்ல முடியாது. உங்களுக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து போராட வேண்டும் அமைதி காக்க கூடாது அப்படி செய்வது தவறு என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement