• Dec 26 2024

பாடகி சுசித்ராவின் பேச்சுக்கு பாய்ந்த அவதூறு வழக்கு! பாடம் புகட்டிய பிரபல நடிகை

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு என்று பெயர் போனவர் தான் பாடகி சுசித்ரா. இவர் சிறிது காலம் சமூக வலைத்தளங்களில் தலை காட்டாமல் இருந்தார். தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் பலவித தகவல்களை பகிர்ந்து வருகின்றார்.

அதாவது கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் தனுஷ், திரிஷா, விஜய் மற்றும் சுசித்ராவின் முன்னால் கணவர் கார்த்திக் குமார் உட்பட பலர் மீது பல சர்ச்சை தரும் தகவல்களை வெளியிட்டு இருந்தார். இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே அதிர்ந்து போயிருந்தது.

இந்த நிலையில், பாடகி சுசித்ரா மீது பிரபல நடிகை ஒருவர் அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதனை தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் வெளியிட்டுள்ளார்.

2011ம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான 'கோ' திரைப்படத்தில் சிறு கேரக்டரில் நடித்து அறிமுகமானவர்தான் நடிகை ரீமா கல்லிங்கல். அதன் பின்பு இவன் யுவன் யுவதி மற்றும் சித்திரை செவ்வானம் உள்ளிட்ட இரண்டு படங்கள் நடித்துள்ளார். ஆனாலும் மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக நடித்து வருகின்றார்.


கேரளாவில் தனக்கென தனியே ஒரு நடன அகாடமியையும் இவர் நடத்தி வருகிறார். நடிப்பு, நடனம், பட தயாரிப்பு என்று பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் மீது தான் இப்போது சுசித்ரா பெரும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

அதாவது சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுசித்ரா, நடிகை ரீமா மற்றும் அவருடைய கணவர் இருவரும் இணைந்து தன்னுடைய வீட்டிலேயே போதை பார்ட்டிகள் நடத்தியதாக கூறி இருந்தார். மேலும் கேரளாவில் பல இளம் நடிகைகள் ரீமா நடத்தும் இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே பேசியதை ரீமா, பாடகி சுசித்ரா ஏன் இப்படி ஒரு செய்தியை பேசினார் என்று எனக்கு தெரியவில்லை. எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெறும் பப்ளிசிட்டிக்காக மட்டும் அவர் இப்படி செய்ததாகவே நான் நினைக்கின்றேன்.

என்னைப் பற்றியும் எனது கணவர் பற்றியும் பேசிய அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க விரும்புகின்றேன். இப்பொழுது சிறப்பு விசாரணை குழுவிடம் புகார் அளித்துள்ளோம். அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது இனி அனைத்தையும் சட்ட ரீதியாக தான் எதிர்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement