• Dec 26 2024

சின்ன வயசுல உண்மைனு நம்பினேன்,அப்பிறம் தான் பொய் என்று தெரிஞ்சிச்சு- ஓபனாகப் பேசிய பிக்பாஸ் பூர்ணிமா

stella / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இது பினாலே வாரம் என்பதால் இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று வரை அக்‌ஷயா, அனன்ய, வினுஷா, பிராவோ, கூல் சுரேஷ், சரவண விக்ரம் ஆகிய ஆறு பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்திருந்தனர்.


இந்த நிலையில் மேலும் மூன்று போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். முதலில் ஜோவிகா செல்ல, அடுத்ததாக கானா பாலா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். இதையடுத்து மூன்றாவது போட்டியாளராக பீனிக்ஸ் பூர்ணிமா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவரின் எண்ட்ரியை பார்த்து அனைவரும் வாயடைத்துப் போயினர்.

அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக வேறலெவலில் எண்ட்ரி கொடுத்துள்ளார். முகத்தை மூடிக்கொண்டு பப்பூன் வேடம் அணிந்திருந்த பூர்ணிமா, உள்ளே டான்ஸ் ஆடியபடி வந்தார். அவரை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. தரையில் உருண்டு பிறண்டு வேறலெவலில் டான்ஸ் ஆடி என்ட்ரி கொடுத்திருந்தார்.


இந்த நிலையில் இவர் அளித்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் மூட நம்பிக்கை தனக்கு இருந்ததாக கூறியுள்ளார். அதாவது, பல்லு விழுந்தால் அதை மண்ணுக்குள் புதைத்து விட்டு காசு வரும் என்று நம்பியிருக்கிறேன்.அதே மாதிரி கொப்பிக்குள் மயில் இறகை வைத்து விட்டு பென்சில் தீட்டி போட்டால் மயலிறகு குட்டி போடும் என்றும் நம்பியிருக்கின்றேன்.அதெல்லாம் உண்மை இல்லை என்று பின்பு தான் தெரிஞ்சிச்சு என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement