சின்னத்திரை நடிகை தாமரை தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னமருமகள் சீரியலில் நடித்து வருகிறார். தற்போது புதிதாக கார் வாங்கிய இவர் அது குறித்து நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கூத்துக்கலைகளில் தன்னை சிறப்பாக வளர்த்துக்கொண்ட தாமரை விஜய்டிவி நடாத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின்னர் பிரபலமானார். அதனை அடுத்து தற்போது சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்படி இருக்க வைராக்கியம் வைத்து இந்த புது காரை வாங்கினேன் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் தாமரை.
மேலும் அவரை கூறுகையில் " எல்லாருக்குமே ஒரு கனவு இருக்கும் அப்படி கார் வாங்கணும் என்பது என்னுடைய கனவு அது இப்போ நிறைவேறிருச்சு. இந்த கார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். சின்னவயசுல காரை தொடவேணாம் என்று எல்லாம் சொல்லுவாங்க இப்போ நானே ஒரு சொந்தமா கார் வாங்கிட்டேன்னு நினைக்கும் போது சந்தோசமா இருக்கு. எனக்கு கார்ல மேல ஓபன் ஆகுறது ரொம்ப புடிக்கும் இந்த காரும் அப்டித்தான் இருக்கு. வண்டி சும்மா பளபளன்னு குதிரை மாதிரி இருக்கு" என்று கூறியுள்ளார்.
மேலும் " ஏற்கனவே ஒரு கார் இருக்கு அது சென்டிமெண்டான கார். இது எனக்கு ஸ்பெஷலான கார். என்னுடைய கணவர் வண்டி கேட்டா யாருமே அப்போ தரவில்லை அதுனால வைராக்கியம் வச்சி வாங்கினேன் இந்த வண்டியை. எனக்கு கார் ஓட்ட தெரியாது சரியான பயம் அதுனால பொறுமையா பழகிக்குவோம் என்று இருக்கேன். இந்த கார் வாங்குங்க நல்லம்னு சொன்னது சின்னமருமகள் சீரியல் இயக்குநர் அவருக்குத்தான் முதல்ல கொண்டு போய் காட்டி சப்ரைஸ் பண்ணனும் என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
Listen News!