2006 ஆம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் தமன்னா. இவருக்கு 35 வயதை கடந்த போதும் தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாகவே வலம் வருகின்றார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் தமன்னா பிரபலமானவராக காணப்படுகின்றார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
d_i_a
இதை தொடர்ந்து தமன்னாவை தமது படத்தில் ஒரு பாட்டுக்கு என்றாலும் ஆட வைத்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் காணப்படுகின்றார்கள். பாலிவுட்டில் கூட தமன்னா கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு தயங்கவில்லை.
தற்போது ஒரு படத்திற்கு இரண்டு முதல் ஐந்து கோடி வரை சம்பளமாக பெற்று வருகின்றார். அதைப்போல பாடலுக்கு மட்டும் தனியாக நடனமாட வேண்டும் என்றால் இவருடைய சம்பளமே வேற லெவலில் காணப்படுகின்றது.
இந்த நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ரா வீட்டில் நடந்த பங்க்ஷனுக்கு தமன்னா சிம்பிளாக, எந்தவித மேக்கப்பும் இல்லாமல் சென்றுள்ளார். இதன்போது அவர் போட்டோகிராபருக்கு போஸ் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!