• Dec 26 2024

அவங்கள நினைச்சு ரொம்ப அழுதேன்; அம்மாவே அனுப்பிய ஸ்பெஷல் கிப்ட்? பீதியை கிளப்பும் வனிதாவின் பேட்டி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் பேத்தியின் திருமணம் அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.

இந்த திருமணத்துக்கு விஜயகுமாரின் மகளான வனிதாவை யாரும் கூப்பிடவில்லை. இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளானது.

இந்த நிலையில், வனிதா பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில்,

என்னுடைய அம்மா இறந்த பிறகு நான் ரொம்பவே கஷ்டப்பட்டன். எனக்கு ஆறுதலாக இருந்தது என்னுடைய அம்மா மட்டும் தான். ஆனால் அவரும் என்னை விட்டுப் போன பிறகு, நான் அவங்கள நினைச்சு ரொம்பவே அழுதுட்டு இருந்தேன்.

அந்த நேரத்தில் எங்களோட வீட்டில் வொயிட் வாஷ் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போது வேலை செய்தவர்கள் எல்லாரும் வீட்டை விட்டு வெளியே போன பிறகு நான் பூஜை அறையில் பார்க்கும் போது ஒரு கண்ணாடி காணப்பட்டது. 


அந்த கண்ணாடி போல ஒரு கண்ணாடி என் அம்மாவிடம் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்த கண்ணாடி ரொம்பவும் ஸ்பெஷல் ஆனது. அது பல நடிகைகள் வைத்திருப்பார்கள். ரொம்ப கிராண்ட் ஆனது. ஆனால் அதனுடைய பிரேம் கருப்பு கலரில் எங்களுடைய அம்மா வைத்திருந்தார். அதை எனக்கு வேணும் என்று நான் பல முறை கேட்டிருந்தேன். ஆனால் எனக்கு தரவில்லை.  ஆனால் திடீரென்று அந்த கண்ணாடி எங்களுடைய சாமியறையில் இருந்தது.


அதை பார்த்ததும், எனது மகள் ஜோவிகாவிடம் கண்ணாடி எப்படி வந்தது என்று கேட்டேன். அதற்கு ஜோவிகா எனக்கு தெரியாது, நீங்க தான் ஏதோ ஆர்டர் போட்டு வச்சிருக்கீங்கன்னு நினைச்சேன் என்று சொன்னார். ஆனால் நானும் ஆடர் போடவில்லை. ஏதாவது ஆர்டர் வந்திருந்தால் கூட அதற்கு கவர் இருக்கும் ஆனால் அப்படி எதுவும் அதில் இல்லை.


அதற்கு பிறகு தான் எனக்கு தோன்றியது, இது என்னுடைய அம்மா எனக்காக இருக்கிறார் என்று எனக்கு பிடித்த பொருளை பரிசளித்ததாக நான் நினைத்தேன்.

இதுவரை வீட்டில் யாருக்குமே அந்த கண்ணாடி எப்படி வந்தது என்று தெரியவில்லை. இப்போ நினைத்தாலும் எனக்கு புல்லரித்து விடும். அந்த கண்ணாடியை நான் இப்போதும் பத்திரமாக வைத்திருக்கின்றேன். அது எனக்கு எனது அம்மா தந்த கிப்ட் என்று கூறியுள்ளார் வனிதா.

Advertisement

Advertisement