• Dec 26 2024

த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை, மரணித்து விடு என்று தான் சொன்னேன்- மன்சூர் அலிகான் சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் த்ரிஷாவுடன் லியோ படத்தில் தனக்கு படுக்கையறைக் காட்சி வைக்கவில்லை என பரபரப்புப் பேட்டியளித்திருந்தார். இவரின் இந்த அருவருக்கத்தக்க பேச்சைப் பார்த்த த்ரிஷா என்னைப் பற்றி தவறாகப் பேசிய இருந்த வீடியோவைப் பார்த்தேன்.

பாலியல் ரீதியாகவும், மரியாதைக்குறைவாக மற்றும் கேவலமான எண்ணத்துடன் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என்னுடன் நடிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து ஆசைப்படலாம். இதுவரை அவருடன் சேர்ந்து நடித்ததில்லை என்பதில் நிம்மதியடைகிறேன். இனியும் சேர்ந்து நடிக்கமாட்டேன். இவரைப்போன்றவர்கள் மனிதக்குலத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று த்ரிஷா பதிவிட்டிருந்தார்.


மேலும் த்ரிஷாவுக்கு அதரவாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் தமது கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். மேலும் நடிகர் சங்கம் மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும் எனக் கூறியது.தொடர் புகார்களையடுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இதனால் மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் அதற்கு த்ரிஷா மன்னிப்பளித்து விட்டாதகவும் கூறப்பட்டது. இதனால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது என எண்ணிய நேரத்தில் மன்சூர் அலிகான் தற்பொழுது அதிர்ச்சித் தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.

அதாவது,னால் தற்போது செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த மன்சூர் அலிகான், “நான் திரிஷாவிடம் மன்னிப்பு கோரவில்லை. மரணித்துவிடு என்றுதான் சொன்னேன். ஆனால் அந்த வார்த்தை மன்னித்துவிடு என புரிந்துக்கொள்ளப்பட்டது. எனவே பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என நானும் அமைதியாக இருந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.




Advertisement

Advertisement