• Dec 26 2024

கோபியை காரசாரமாக விளாசிய ராதிகா! என்ன கோபி பயமா இருக்கா? இனி பயங்கரமா இருக்கும்! பாக்கியாவின் மைண்ட் வாய்ஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் வெளியான ப்ரோமோவில் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதன்படி, பழனிச்சாமி, பாக்கியா இருவரும் வீட்டில் இருந்து கதைத்ததை தவறாக அனைவரிடமும் சொல்லிக் கொள்கிறார் கோபி.

அத்துடன், என்ன நடக்குது இந்த வீட்டுல? பாக்கியாவ கேள்வி கேட்க யாருமே இல்லையா? என கோபி வீட்டார் முன்னிலையில் பாக்கியாவை வேணும் என்றே அவமானப்படுத்துகிறார்.

அந்த நேரத்தில், இனியாவும் ராதிகாவும் உள்ளே வர, நடந்தவற்றை சொல்லி, வா நீ நியாயம் கேளு என ராதிகாவை சொல்லுகிறார்.


இதையடுத்து, முதல்ல நான் கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க. பாக்கியா யார் கூட கதைச்சாலும் உங்களுக்கு என்ன? என கோபியை எதிர்த்து கேள்வி கேட்கிறார் ராதிகா.

இவ்வாறு மெல்ல மெல்லமாக ராதிகா பாக்கியாவுக்கு ஆதரவாக இருப்பதை நாம் காணலாம். எனினும் இனி கோபியின் நிலை தான் கேள்விக் குறியானது. இதோ வெளியான ப்ரோமோ....


Advertisement

Advertisement