• Apr 04 2025

" ரசிகர்களை அங்கு அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.." பிருத்விராஜ் வருத்தம்...

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் பிருத்விராஜ் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபலங்கள் மறைந்த பின்னர் அவர்களது குடும்பங்களை கவலையடைய செய்யும் விதமாக ரசிகர்களின் தவறான நடத்தை குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ளார்.


குறித்த பேட்டியில் அவர்  “என்னைப் பொறுத்தவரை பிரபலங்கள் மறைந்துவிட்டால் அங்கு ரசிகர்களை அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் எனது அப்பா இறந்தபோது அவரது உடலை எங்கள் வீட்டில் வைத்திருந்தோம். அந்த நேரத்தில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருந்த ரசிகர்கள் மோகன்லால், மம்முட்டி போன்ற பிரபல நடிகர்களை பார்த்ததும் ஆரவாரம் செய்து கைதட்டி விசில் அடித்தார்கள். அந்த ரசிகர்கள் யாருமே எனது மனநிலை அல்லது என் குடும்பத்தின் மனநிலை குறித்து யோசிக்கவில்லை." என கூறியுள்ளார்.


மேலும் பிருத்விராஜ் தனது இந்த கருத்துகளை பகிர்ந்தபோது பிரபலங்களின் மறைவு மற்றும் குடும்பத்திற்கு அஞ்சலியோடு மரியாதை செலுத்துவதை எல்லாம் தான் மனிதம் என மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement