சேது,நந்தா,பிதாமகன்,நான் கடவுள்,அவன் இவன்,பரதேசி,தாரை தப்பட்டை,நாச்சியார் போன்ற வெற்றி படங்களை இயக்கிய பாலா தற்போது வணங்கான் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.அருண் விஜய் நடித்துள்ள இப் படம் ஜனவரி 10 ஆம் திகதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குநர் பாலா கோபியுடன் ஒரு நேர்காணலை மேற்கொண்டுள்ளார்.அதில் உங்களது வாழ்க்கை ஒரு சராசரியாக இருந்திருந்தால் உங்கள் வாழ்க்கை சரியாக இருந்திருக்கும் என நினைக்கிறீங்களா என்ற கோபியின் கேள்விக்கு அவர் " ஒன்று நான் கொலை செய்யப்பட்டிருக்கணும் இல்லை நான் இயற்கையிலேயே மரணம் அடைந்திருக்கணும் இரண்டில் எதாவது ஒன்னு நடந்திருக்கும் வாழ்ந்து காட்டியிருக்க முடியாது"என கூறியுள்ளார்.
மற்றும் சினிமாவே என்னை காப்பாற்றியது என கூறினார்.இதற்கு கோபி மிகவும் கவலையடைந்து கண் கலங்கியுள்ளார் .
Listen News!