• Dec 26 2024

யாராவது வெறுத்தால் நீங்க சிரிச்சிட்டு போங்க- பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் ஜனனி.இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளினியான இவர், மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலமாகத் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே அதிரடியாக களமிறங்கிய ஜனனி, ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு போட்டியாளராக இருந்தார்.அதேபோல் கொஞ்சம் துடுக்காக வாயை விட்டு சில பிரச்சனைகளில் சிக்கினாலும், எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.


 வந்த வேகத்திலேயே ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடிக்க தொடங்கினார். அதன்படி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்தார்.


தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் இவர் தன்னுடைய புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது புடவையுடன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement