• Dec 26 2024

இனி எல்லாத்தையும் நிறுத்திட்டு அதை தான் செய்யப் போறேன்! தியாகராஜன் எடுத்த சபதம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக காணப்படும் நடிகர் பிரசாந்த் 90 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ரசிகைகளின் கனவு கண்ணனாகவே வலம் வந்தார். ஆனாலும் அவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது அந்தகன் படத்தின் மூலம் மீண்டும் மாஸாக கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், அந்தகன் படத்தை இயக்கிய தியாகராஜன் அடுத்த பட வேலைகள் எல்லாம் நிறுத்திவிட்டு தனது மகன் பிரசாத்துக்கு பெண் தேடி திருமணம் செய்வதுதான் தனது முதல் வேலை எனக் கூறியுள்ளார்.

அதாவது பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறி உள்ளதாகவும், இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படம் என சுகந்திர தினத்தன்று போஸ்டர் எல்லாம் வெளியிட்டு ரசிகர்கள் பிரசாந்தை உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தனர்.


இந்த படம் வெளியான அடுத்த நாளே வெற்றி விழாவை கொண்டாடாமல் ஒருவாரம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய பிறகு இன்றைய தினம் அந்தகன் படத்தின் வெற்றி விழாவை ஏற்பாடு செய்து இருந்தார்  தியாகராஜன். அதில் அந்தகன் படக்  குழுவினர் அனைவரும் கலந்து இருந்தார்கள்.

இந்த திரைப்படம் ஒரு வாரத்தில் ஐந்து முதல் ஆறு கோடி ரூபாய் வரை வசூலித்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனால் பிரசாந்த் மீண்டும் டாப் இயக்குனர்களின் படங்களில்  நடித்து பாக்ஸ் ஆபீஸில் இடத்தை பிடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையிலேயே தியாகராஜன், எனக்கு மன வருத்தமான விஷயம் என்றால் அது பிரசாந்தோட திருமண வாழ்க்கை தான். அதைப்பற்றி நானும் அவங்க அம்மாவும் யோசிக்காத நாளே இல்லை. அவங்க அம்மா ஒரு நல்ல அமைதியான பொண்ண தேடிட்டு இருக்காங்க. இனி பட வேலை எல்லாம் நிறுத்திட்டு அவருக்கு கல்யாணம் பண்றது தான் என்னுடைய முதல் வேலை என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement