• Dec 26 2024

நான் வில்லியாக தான் ட்ரை பண்ணுறன்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஓபன் டாக்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வருவதனால் இதன் டிஆர்பி ரேட்டிங் தற்போது முதல் ஐந்து இடத்திற்குள் முன்னேறியுள்ளது.

இந்த சீரியலில் ரோகிணியின் நண்பியாக வருபவர் தான் வித்யா. இவருக்கு ரோகிணி பற்றிய உண்மைகள் அனைத்தும் தெரிந்து இருந்தாலும் தனது நண்பியை காப்பாற்றுவதற்காக அவர் சிக்கலில் இருக்கும் போது ஐடியாக்களை கொடுத்து அவரை காப்பாற்றி வருகிறார்.


இந்த நிலையில், பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி வழங்கிய வித்யா, சிறகடிக்க ஆசை சீரியல் பற்றி சுவாரசிய தகவல்களையும் தனது கேரக்டர் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில், எனக்கு ஒரு குருட்டு ஆசை இருந்தது. அதாவது,  எந்த சீரியலாக இருந்தாலும் எனக்கு வில்லி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஏனென்றால் அதில் தான்  பேமஸ் ஆவது கொஞ்சம் ஈஸியாக இருக்கும். ஆனா இந்த சீரியலில் அது நெகட்டிவ் கிடையாது. இது ஒரு டிஃபரண்டான கேரக்டர். ரோகினியின் தாலி பிரித்து கோர்க்கும் விழாவில் தான் நிறைய சேஞ்ச் இருந்துச்சு. எனக்கு இந்த கேரக்டரில் நடிக்க பிடிச்சிருக்கு என சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் வித்யா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement