• Dec 25 2024

நிஜத்தில் அன்னபூரணியாக மாறி ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறிய நயன்தாரா... நெகிழ்ச்சியான சம்பவம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் ஜெய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது அன்னபூரணி திரைபடம். நயன்தாராவின் 75வது படமான இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். 


சமையல் தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற இலக்குடன் காணப்படும் அன்னபூரணி சந்திக்கும் சவால்களை இந்தப் படம் எடுத்துக் காட்டியது. படம் அதிகமான ரசிகர்களை சென்றடையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் இந்தப் படம் சில கோடிகளை வசூலித்துள்ளது. படத்தில் அன்னபூரணியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் நயன்தாரா. 


மேலும் அவர் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கெல்லாம் நயன்தாரா மிகவும் உற்சாகமாக ரியாக்ட் செய்ததையும் இந்த நிகழ்வில் பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியை ஆங்கர் அர்ச்சனா வழிநடத்தினார். சிறிது நேரம் கழித்து ஜெய், இந்த நிகழ்ச்சியில் சர்ப்பிரைஸ் விசிட் கொடுத்தார்.

அவரும் ரசிகர்களுக்கு பிரியாணி பகிர்ந்த நிலையில், ஒரு ரசிகை அவருக்கு முத்தம் கொடுத்ததையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து இங்கு என்ன நடக்கிறது என்று அர்ச்சனா கேட்க, அதை அந்த ரசிகையிடம்தான் கேட்க வேண்டும் என்று ஜெய் வெட்கத்துடன் கூறினார். 


Advertisement

Advertisement