• Dec 26 2024

உண்மையாகவே குட் நியூஸ் சொன்ன இந்திரஜா ரோபோ சங்கர்.. குழந்தை பிறப்பது எப்போது?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் கடந்த மார்ச் மாதம் நடந்த நிலையில் அவர் குட் நியூஸ் சொன்னார் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது. ஆனால் அந்த குட் நியூஸ் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பலரும் அந்த குட் நியூஸ் அவர் கர்ப்பமாக இருப்பதை தான் சொல்லப் போகிறார் என்று நினைத்தனர்.

இந்த நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இந்திரஜா மற்றும் அவரது கணவர் கார்த்திக் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் போது உண்மையிலேயே அவர் குழந்தை பிறப்பு குறித்த தகவலை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான நடிகை ராதா குழந்தை எப்போது பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டபோது, என் வீட்டிலும் சரி எனது கணவர் வீட்டிலும் சரி, ஒரே ஒரு குழந்தையுடன் வளர்ந்ததால் எங்கள் இருவர் வீட்டிலும் விரைவில் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். நாங்களும் அந்த முடிவில் தான் இருக்கிறோம், அதற்கான முயற்சியில் இருக்கிறோம்’ என்றும் தெரிவித்தார்.

எனவே விரைவில் நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள போகிறோம் என்று  இந்திரஜா ரோபோ சங்கர்  தெரிவித்துள்ளதை அடுத்து விரைவில் நல்ல செய்தியை சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement