இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற ஜனவரி 10-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் பவன் கல்யாணுக்கு நேரில் சென்று அழைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் ஆந்திர மாநில துணை முதல்- மந்திரி பவன் கல்யாண் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இப்படத்தின் தயாரிப்பாளர் நேரில் சென்று அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!