• Dec 26 2024

பிக்பாஸ் சரவண விக்ரம் தவறான வழியில் போகின்றாரா?, அவரது சகோதரி போட்ட அதிர்ச்சிப் பதிவு- இப்படிப் பண்ணீட்டாரே..

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் சீசன் 7 பைனல் இன்னும் இரண்டு நாளில் நடக்க இருக்கும் நிலையில் வின்னர் தேர்வில் குழப்பமே இன்னும் நீடித்து வருகிறது. பழைய சீசன்களில் இவர் தான் வின்னர். ரன்னர் யாராக இருக்கும் எனவே ரசிகர்கள் யோசித்து வருவார்கள். ஆனால் இந்த முறை அதில் கூட நிலையான முடிவு இன்னும் எட்டப்படவே இல்லை.

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த போது இருந்த பரபரப்பு ஆரம்ப நாளில் இருந்து குறைந்து கொண்டே வந்தது. இதற்கு காரணம் பரபரப்பாக எதுவுமே இல்லாமல் வாயால் கண்டெண்ட் கொடுங்கள் என்ற கிரியேட்டிவ் டீமின் மோசமான அணுகுமுறை தான். இருந்து நிகழ்ச்சியை போட்டியாளர்கள் முடிந்த வரை கையில் வைத்து இருந்தனர்.


 மேலும் இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று வரை அக்‌ஷயா, அனன்ய, வினுஷா, பிராவோ, கூல் சுரேஷ், சரவண விக்ரம் ஆகிய ஆறு பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மேலும் மூன்று போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். முதலில் ஜோவிகா செல்ல, அடுத்ததாக கானா பாலா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். இதையடுத்து மூன்றாவது போட்டியாளராக பீனிக்ஸ் பூர்ணிமா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

இரு ஒரு புறம் இருக்க சரவண விக்ரமின் சகோதரி தற்பொழுது ஒரு பதிவினைப் போட்டுள்ளார். அதில்,உங்கள் சொந்த குடும்பத்தை விட மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள் என்றால் தவறான வழியில் செல்கின்றீர்கள் என்று அர்த்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதனால் விக்ரமுக்கும் குடும்பத்திற்கும் இடையில் ஏதாவது பிரச்சினைா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement