• Dec 25 2024

சன் பிக்சர்ஸை அலறவிட்ட அட்லீ! 1000 கோடி வசூலித்த திமிர்தான் காரணமா?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் துணை இயக்குனராக இருந்து சினிமாவுக்கு அறிமுகமாகியவர் அட்லீ ஆவார்.ஆர்யா மற்றும் நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகினார்.முதல் திரைப்படமே அமோக வெற்றியாக அமைந்ததால் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து ஹிட் படங்களை கொடுத்தார்.


தளபதியின் தீவிர ரசிகர் இவர் என்பதனாலேயே விஜய் நடிப்பில் தெறி திரைப்படத்தின் மூலம் ஹிட் கொடுத்த இவர் தொடர்ந்து மெர்சல் , பிகில் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ்நாட்டின் முன்னணி  இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.இவ்வாறு யிருந்த இவர் இந்திய அளவில் பிரபலமானது ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தின் மூலமே ஆகும். தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இவர் இயக்கும் அடுத்த திரைப்படத்திற்காக போட்ட நிபந்தனைகள் வைரலாகின்றது.


அல்லு அர்ஜுனின் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. குறித்த படத்தை இயக்க இருக்கும் அட்லீ வழக்கமான தனது சம்பளத்துடன் குறித்த திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தால் அதில் எனக்கும் பங்கு தரவேண்டும் என நிபந்தனை போட்டிருப்பதாகவும் அதை சன் பிக்சர்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement