• Dec 26 2024

16 வயது நடிகைக்கு முத்தம் கொடுத்து விட்டு பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவது சரியா?- கமல்ஹாசனை வறுத்தெடுத்த பிரபல நடிகரின் மனைவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் சீசன் 7. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமாக இந்த சீசன் அமைந்தது. பிக்பாஸ் இரண்டு வீடாக பிரிந்ததில் இருந்து டாஸ்க் விளையாட்டிலும் புதுமைகள் இருந்தன.

ஆனால் போட்டியாளர்கள் குரூப் குரூப்பாக ஆடாமல் கூட்டம் கூட்டமாக சேர்ந்து ஒவ்வொருத்தரையும் காலி செய்து வருகிறார்கள். அதன் மூலம் நாம் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி அமைந்த நிகழ்ச்சியாகத்தான் நேற்றைய எபிசோடு அமைந்தது.


மொத்தமாக சேர்ந்து எப்படியாவது பிரதீப்பை வீட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என ப்ளான் பண்ணிக் கொண்டிருந்தனர். அmதன் படி போட்டியாளர் ரெட்காட் கெடுத்ததற்கு இணங்க, பிரதீப் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக் பாஸ் 7ல் கலந்துகொண்டு கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய யுகேந்திரனின் மனைவி பிரதீப் வெளியேற்றப்பது குறித்து பேசியுள்ளார்.இதில் 'பெண்களின் பாதுகாப்புக்காக தான் இந்த முடிவு என கூறுகிறார் கமல். புன்னகை மன்னன் படத்தில் நடிகை ரேகாவிடம் அனுமதி கேட்காமல் அவருக்கு லிப் கிஸ் கொடுத்தார் கமல். 


அப்போது நடிகை ரேகாவிற்கு 16 வயது தான். அந்த படம் மட்டுமின்றி கமல் நடித்த பல படங்களில் நடிகையுடன் லிப் கிஸ் இருக்கும். இப்படியிருக்கும் நிலையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கமல் பேசுவது எனக்கு புரியவே இல்லை' என பேசியுள்ளார்.




Advertisement

Advertisement