• Dec 26 2024

ஜெயம் ரவி தனியாக எடுத்த முடிவா விவாகரத்து..? கண்ணீர் மல்க ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை வைரல்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷ் - ஐஸ்வர்யா, சமந்தா - நாக சைதன்யா, ஜிவி பிரகாஷ் - ஆகியோர் அடுத்தடுத்து விவாகரத்து செய்தார்கள். இது  மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து ஜெயம் ரவியும் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரியப் போகின்றார் என்ற செய்திகள் வெளியானது. ஆனாலும் அது வதந்தியாக தான் இருக்க வேண்டும் என பலர் நினைத்தார்கள். எனினும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக அதிகாரபூர்வமாகவே அறிவித்திருந்தார்.

ஜெயம் ரவிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் திடீரென இந்த முடிவை எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அத்துடன் அவரது மனைவி அளித்துள்ள பல பேட்டிகளில் ஜெயம் ரவி சிறந்த கணவர் என்று அவரை விட்டுக் கொடுக்காமல்  பேசி உள்ளார். ஜெயம்ரவியும் அதேபோல மனைவி மீது மிகுந்த பாசம் கொண்டு உள்ளார்.

எனினும் இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் ஜெயம் ரவியின் மாமியார் தான் என்றும் அவருடைய வளர்ப்பு மகன் தான் என்றும் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஜெயம் ரவி எந்த ஒரு காரணத்தையும் வெளியிடவில்லை.


இந்த நிலையில், ஜெயம் ரவி தமது விவாகரத்து பற்றி அவசர முடிவை  தனியாகத்தான் எடுத்தார் என்று ஆர்த்தி தற்போது நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பை பார்த்து அதிர்ச்சையாகி விட்டேன். எனக்கு இது பற்றி எதுவுமே சொல்லவில்லை ,ஜெயம் ரவி தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்து வெளியிட்டது எனக்கு கவலை அளித்துள்ளது.

நான் எனது  மகன்களின் வருங்காலத்தை நினைத்து வருத்தப்படுகின்றேன். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து ஜெயம் ரவியிடம் பேச முயற்சித்த போது அவர் அதற்கு அனுமதியை வழங்காமல் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இணையத்தில் என்னையும் என் குடும்பத்தை பற்றி தவறான தகவல்கள் பரவ இது காரணமாக அமைந்துவிட்டது. 

ஜெயம் ரவி இப்படி செய்வார் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை. 18 வருடங்கள் ஒன்றாக இருந்த வாழ்க்கை முற்றிலுமாக உடைந்து விட்டது என கண்ணீர் மல்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.


Advertisement

Advertisement