தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சித் தலைவர் ஆன விஜய் தலைமையில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி முதலாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கு ரஜினிகாந்த் மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.
விஜய் நடத்திய மாநில மாநாட்டில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதேபோல விஜய் அதில் பேசிய கருத்துக்கள் ஏனைய கட்சிகளை விமர்சிப்பதாக பலர் கண்டனங்களும் தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில், நான் அரசியலுக்கு வந்தபோது இப்படி மக்கள் வரவேற்பு கொடுக்கவில்லை. ஆனால் விஜய்க்கு கொடுத்துள்ளார்கள் என பேசிய சீமான், நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் விஜயை மொத்தமாக கிழித்தெடுத்து பேசியுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
d_i-a
அதன்படி அவர் கூறுகையில், அரசியல் அறிவே இல்லாமல் விஜய் அரசியலுக்கு வருகின்றார். சாலையில் ஒன்று இந்தப் பக்கம் நில்லு இல்லை என்றால் அந்தப் பக்கம் நில்லு.. நடுரோட்டில் நின்றால் லாரி அடித்து செத்து விடுவாய் என்று மிகவும் மோசமாக பேசியுள்ளார். மேலும் அரசியல் நாகரிகமில்லாமல் விஜயை திட்டி பேசியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் சீமானை திட்டி தீர்த்து வருகின்றார்கள்.
மேலும் விஜய் பேசியது கொள்கைகள் இல்லை. அழுகிய கூமுட்டை. நான் குட்டிக்கதை சொல்பவன் இல்லை.. வரலாற்றை சொல்ல வந்தவன்.. நீங்கள் அம்பேத்கரை, பெரியாரை எல்லாம் இப்பத்தான் படிக்கின்றீர்கள்.. நான் படித்து பிஎச்டி முடித்து விட்டேன்.. நீங்க இப்பதான் வரலாற்றை ஆராய்கின்றீர்கள்.. நாம் அந்த வரலாற்றையே கரைத்து குடித்து இருக்கின்றோம்..
மேலும் நான் ஏசி அறையில் அமர்ந்து சிந்திப்பவன் கிடையாது.. கடும் சிறையிலிருந்து சிந்தித்து வந்தவன்.. நான் சத்தமாக பேசுகின்றேன் என்றால் என்னிடம் சரக்கு இருக்கிறது கருத்து இருக்கிறது.. அதனால் தான் சத்தமாக பேசுகின்றேன்..
தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா? எங்களுடைய இலட்சியத்திற்கு எதிராக பெற்ற அப்பனே வந்தாலும் எதிரி எதிரிதான்.. தம்பியும் கிடையாது அண்ணனும் கிடையாது.. இந்த பூச்சாண்டி எல்லாம் எங்கள்ட்ட காட்ட வேண்டாம்.. 2026 ஆம் ஆண்டு என்னுடைய ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது என்று கொந்தளித்துள்ளார் சீமான்...
Listen News!