• Dec 26 2024

ஜெனி குடும்பத்தின் சோலியை முடித்த ஈஸ்வரி? ராஜிக்கு என்ன ஆச்சு? பாக்கியாவுக்கு தொடரும் அடுத்த சவால்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்குது என்று பார்ப்போம்... அதில்,  ராஜியின் கல்யாணத்தை முன்னிட்டு அவரின் மொத்த குடும்பமும் ஆட்டம் பாட்டம் என ரொம்ப சந்தோசமாக ஆடுகின்றனர். ராஜி அப்போதும் கவலையா இருக்க, நீ கல்யாண பொண்ணு மாதிரியே இல்லையே என ராதிகா விசாரிக்கிறார். 


அதற்கு ராஜி ஒன்றும் இல்லை என சொல்ல, கண்ணன் போன் செய்து நீ எப்ப வீட்ட விட்டு வர போறா என மிரட்டுகிறார். எல்லாரும் தூங்கிய பிறகு வாரேன் என சொல்லி  போனை வைக்கிறார் ராஜி.


மறுபக்கம், ஈஸ்வரி நம்ம ஊரு கோவிலுக்கு போயிட்டு வருவோம் என செழியனை அழைக்க, ராமமூர்த்தி ஈஸ்வரியை கேள்வி மேல் கேள்வி கேட்க, ஒரு மாதிரி சமாளித்து செல்கிறார் ஈஸ்வரி.


போகும் வழியில், செழியன் என்ன விஷயம் ஒரு மாதிரி டென்ஷனா இருக்கீங்க என கேக்க, கோவில் போக முதல் ஜெனி வீட்ட விடு என சொல்ல, செழியன் அதிர்ச்சி அடைகிறார். இருந்தாலும் ஜெனி வீட்ட வண்டிய விடு என ஈஸ்வரி பிடிவாதமாக நிற்க, செழியனும் செல்கிறார்.


இன்னொரு பக்கம், ஜெனி வீட்டில் சொந்தக்காரர்கள் எல்லாரும் பங்க்ஷனுக்கு வந்து , செழியன் பற்றி விசாரிக்கிறார்கள். ஜெனியின் அப்பா அவற்றை சமாளித்துவிட்டு கோவிலுக்கு செல்ல, கூடவே ஜெனியும் வாரேன் என சொல்லுகிறார். ஆனால் குழந்தையை சொந்தக்காரர்கள் வைத்து இருப்பதாக சொல்ல, முதலில் மறுத்த ஜெனி பின்பு சரி என செல்கிறார்.


இதை தொடர்ந்து, ஜெனி வீட்டுக்கு சென்ற ஈஸ்வரி, குழந்தையை தூக்கிக் கொண்டு செல்ல, அங்கு இருப்பவர்கள் தடுக்கவும், இனி பங்க்ஷனும் நடக்காது, ஒன்னும் நடக்காது, ஜெனியின் அப்பாட்ட சொல்லுங்க.. குழந்தைட அப்பாவும், பாட்டியும் வந்து குழந்தையை கொண்டு போறாங்க என்று, இவ்வாறு சொல்லி குழந்தையுடன் கிளம்புகிறார் ஈஸ்வரி.


பாக்கியா சமைக்கும் போது கோமதியும் வருகிறார். பின்பு அவர் தனது வாழ்க்கையை பற்றி சொல்ல, பாக்கியாவும் தனக்கு டிவோஸ் ஆனதை சொல்லி, இதனால் தான் இப்போ இவ்வளவு தூரம் முன்னாடி வந்து இருக்கன். இல்லை என்றா புருஷன நம்பி ஏமாந்து இருப்பன்  என சொல்கிறார்.


இதையடுத்து, வீட்டிற்கு பாக்கியா போன் பண்ண, ராமமூர்த்தி எடுக்கிறார். செழியனும், ஈஸ்வரியும் அவசரமாக கிளம்பி போன விஷயத்தையும், ஈஸ்வரி கொஞ்ச நாளாவே டென்ஷனா இருந்த விஷயத்தையும் சொல்ல, சரி நான் போன் பண்ணி பாக்கிறேன் என பாக்கியா சொல்லுகிறார்.


ராஜியும், ராதிகாவும் ரூமில் இருக்க, அங்கு ராஜியின் அம்மா வருகிறார். அப்போது ராஜி அவரது அம்மாவை கட்டிப் பிடித்து அழுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement