• Dec 26 2024

கண்டிப்பாக இது பைசா வசூல் திரைப்படம்- கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் விமர்சனம்- படத்தை பார்த்தது யார் தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிரபல நடிகர் தனுஷ், கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மூத்த தமிழ் திரையுலக நடிகர் நாசர், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்துள் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படம் வருகின்ற 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

குறிப்பாக இலங்கை ராணுவத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் துரிதமாக நடந்து முடிந்தது. 


இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார்.அத்தோடு ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. வெளிநாடு சென்சார் போர்டு உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.


இதில் 'கேப்டன் மில்லர் பைசா வசூல் திரைப்படம். வழக்கம் போல் தனுஷ் மிரட்டிவிட்டார்' என கூறியுள்ளார். மேலும் கேப்டன் மில்லர் படத்திற்கு 3.5/5.0 மார்க் போட்டுள்ளார். இவருடைய இந்த விமர்சனம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement