• Jan 22 2025

என்னை டிவி, போனில் பார்த்தது போதும்.. இனிமேல் அங்கு சந்திக்கலாம்! சௌந்தர்யா ட்விட்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன், ஜனவரி 19ஆம் தேதியுடன் நிறைவுக்கு வந்தது.

இதன் ஆரம்பத்தில் மொத்தமாக 24 போட்டியாளர்கள் பங்கு பற்றிய போதும் அதில் முத்துக்குமரன், சௌந்தர்யா, விஷால், பவித்ரா மற்றும் ரயான்ஆகியோரே பைனலுக்காக தேர்வு செய்யப்பட்டார்கள்.

இதில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் முதல் இடத்தை பிடித்து வெற்றி கிண்ணத்தை தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தை சௌந்தர்யா பிடித்திருந்தார் . அதில் எதிர்பாராத விதமாக பவித்ராவும் ரயானும் எலிமினேட்டாகி வெளியே சென்றிருந்தார்கள்.


இந்த நிலையில், சௌந்தர்யா தன்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவுகளை பதிவிட்டுள்ளார். தற்பொழுது அவருடைய பதிவு வைரலாகி வருகின்றது.

அதன்படி அவருடைய பதிவில், இந்த வெற்றி, என் முதல் படம் வெளியாகி 106 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதைப் போல உள்ளது, அதன் வெற்றியைப் போலவே நான் இப்போது இந்த வெற்றியை அனுபவிக்கிறேன்.

Bigg Boss வீட்டில் இருக்கும்போது, நான் எந்த விளையாட்டையோ, டாஸ்கையோ வெல்ல முடியாமல் போயிடும் என எப்போதும் கவலைப்பட்டேன். ஆனால் இறுதிச்சுற்றிற்கு வந்தபோது, என் மனசு என்னிடம் சொன்னது, ‘நீ ஏற்கனவே மக்களின் மனசை வென்றிருக்கிறாய்,’ அதுதான் எனது உண்மையான வெற்றி. நான் மக்களை வென்றுவிட்டேன்.


என்னை இயல்பாகவே ஆதரித்து, நேசித்த உங்களைப் பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

Bigg Boss என்னிடம், வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு என்னை நேசிக்கிறவர்களையா அல்லது என்னை விரும்பாதவர்களையா சந்திக்க போகிறாய் என கேட்டார். அப்போது நான், ‘என்னை நேசிக்கிறவர்களை,’ என்று சொன்னேன். ஆனால் இப்போது, எல்லோரையும் சந்திக்க தயார் — என் மனசை ஒவ்வொருவருக்கும் கொடுக்க🩷

நீங்கள் என்னை டிவி மற்றும் போனில் பார்த்து வந்தீர்கள், அடுத்து விரைவில் திரையரங்கில் உங்களை சந்திக்கிறேன்.. என தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement