• Jan 22 2025

பசங்க பட நடிகர் கிஷோர் அப்பா ஆகப் போகிறாரா? குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அன்பரசு என்ற கேரக்டரில் நடித்தவர் தான் கிஷோர். 

இந்த படத்திற்கு நடிகர் கிஷோருக்கு 13 ஆண்டுகளுக்கு கழித்து தமிழ்நாடு அரசின் விருது மற்றும் தேசிய விருதும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடிகர் கிஷோர் திடீரென சின்னத்திரை நடிகையான ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக அறிவித்ததோடு அவரை விரைவிலேயே திருமணமும் செய்துள்ளார். ஆபீஸ் சீரியலில் அறிமுகமாகி பல சீரியல்கள் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ப்ரித்தி.


எனினும் நடிகை ப்ரீத்தி குமார் கிஷோரை விட நான்கு வயது மூத்தவர். இது தொடர்பில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனாலும் கிஷோர் தனது காதலியை விட்டுக் கொடுக்காமல் பல பேட்டிகளில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் திருமணம் முடிந்து சுமார் ஒன்றரை வருடம் ஆகும் நிலையில் ப்ரித்தி கர்ப்பமாக இருப்பதாக தங்களது பிரக்னன்சியை அறிவித்துள்ளார்கள் கிஷோர் தம்பதியினர். தற்போது அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


Advertisement

Advertisement