• Dec 26 2024

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? ஜெயம் ரவியை வைத்து பிளான் போடும் மோகன் ராஜா..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்தடுத்த இரண்டு படங்களை இயக்க மோகன் ராஜா திட்டமிட்டுள்ளதாகவும் அந்த இரண்டு படங்களுமே இரண்டாம் பாக படங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜெயம்என்ற திரைப்படத்தில் தான் நடிகராக ஜெயம் ரவியும், இயக்குனராக மோகன் ராஜாவும் அறிமுகமான நிலையில் அதன் பின் இருவரும் இணைந்து சில படங்களில் பணிபுரிந்துள்ளார்கள் என்பதும் இருவரும் இணைந்து படங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட வெற்றி பெற்ற படங்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானதனி ஒருவன்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும்பொன்னியின் செல்வன்மற்றும்தக்ஃலைப்ஆகிய படங்களில் ஜெயம் ரவி கமிட் ஆனதால் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆனது என்றும் கூறப்பட்டது.



இந்த நிலையில்தனி ஒருவன்  2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் இன்னொரு இரண்டாம் பாகம் திரைப்படத்தையும் மோகன் ராஜா இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த படம் தான்எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி 2’ என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமிபடத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை முழுவதும் மோகன் ராஜா எழுதி முடித்து விட்டதாகவும்தனி ஒருவன் 2’ படத்தை முடித்ததும் அடுத்ததாக உடனே அந்த படத்தையும் அவர் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே ரசிகர்களுக்கு அடுத்தடுத்து 2 லட்டு போன்ற திரைப்படங்கள் கிடைக்கவுள்ளன.

Advertisement

Advertisement