• Dec 27 2024

25 கோடிக்கு கங்கணம் கட்டிய ஜெயம் ரவி.. ரூட்டை மாற்றிய மாமியார்! பயில்வான் உடைத்த உண்மை

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நட்சத்திரங்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக நிலையில், இன்னொரு பக்கம் முக்கிய பிரபலங்கள் தமது குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி விவாகரத்து பெற்று வருகின்றார்கள்.

அந்த வகையில் நடிகர் தனுஷ் அண்மையில் தான் ஐஸ்வர்யாவை சட்டபூர்வமாக பிரிவதற்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து ஜீவி பிரகாசும் தனது காதல் மனைவியான சைந்தவியை விவாகரத்து செய்வதாக அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தார். 

இதை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியும் தனது மனைவியை விவாகரத்து பண்ண உள்ளதாக தகவல்கள் தாறுமாறாக வெளியானது. ஆனாலும் ஜெயம் ரவியின் மனைவி தனது  இன்ஸ்டாகிராமில் 'காதல் என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை' என தெரிவித்து இருந்தார். எனினும் அடுத்த நாளே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த ஜெயம் ரவியின் போட்டோக்களை எல்லாம் டெலிட் செய்திருந்தார். இதனால் சந்தேகம் அதிகரித்தது.

இந்த நிலையில், தற்போது ஜெயம் ரவி -ஆர்த்தியின் விவாகரத்து பேச்சுக்கு காரணம் அந்த 25 கோடி ரூபாய் தான் என புதுக்கதை ஒன்றை கிளப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


அதன்படி அவர் கூறுகையில், ஆர்த்தியை திருமணம் செய்த பின்  ஜெயம் ரவி வீட்டோட மாப்பிள்ளை ஆனார். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியின் மார்க்கெட் சரிய, ஜெயம் ரவியின் மாமியார் அவரை வைத்து படங்கள் தயாரித்தார். 

இப்படியான சூழ்நிலையில் பாண்டிராஜ் ஜெயம் ரவியின் மாமியிடம் கதை சொல்ல, அவருக்கு அந்த கதை பிடித்துப் போனது. அதனால் ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து 53 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க ஒத்துக் கொண்டார் ஜெயம் ரவியின் மாமியார் ஆன சுஜாதா.

ஆனால் ஜெயம் ரவிக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என கேட்க, உங்களுக்கு அவ்வளவு மார்க்கெட் இல்லையே என்று அவரது மாமியார் கூறிவிட்டார். ஆனாலும் தனக்கு 25 கோடி வேணும் என ஜெயம் ரவி விடாப்படியாக நின்று உள்ளார்.

இதனால் இயக்குனரை அழைத்த சுஜாதா, பட்ஜெட்டை குறைத்துக் கொள்ளுமாறு சொல்ல, அவர் தான் வாங்கிய ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸை அவரிடமே திருப்பி கொடுத்துவிட்டு அந்த கதைக்கு விஜய் சேதுபதியிடம் ஓகே வாங்கி விட்டார்.

இந்த விஷயம் ஜெயம் ரவியின் காதுக்குச் செல்ல, இதுக்கெல்லாம் காரணம் தனது மாமியார் தான் என நினைத்து பேசியுள்ளார். இதனால் ஆர்த்தியோடும் அவரது மாமியாருடனும் தொடர்ந்து சண்டை வந்துள்ளது. இந்த பிரச்சினையை இப்போது விவாகரத்தில் கொண்டு வந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement