• Dec 26 2024

ஜான்சிராணி, கரிகாலனுக்கு மீண்டும் அடித்த அதிஷ்டம்.. பூஜையுடன் ஆரம்பமான புது சீரியல்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான சீரியலில் ஒன்றுதான் எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியல் அண்மையில் தான் நிறைவுக்கு வந்தது.

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் தற்போது நடைபெற்று உள்ளது. இதற்கு பலரும் தமது வருத்தங்களை பதிவிட்டு வருகின்றார்கள்.

அதுமட்டுமின்றி பல புதிய புதிய சீரியல்களுக்கான பூஜைகளும் இன்று நடத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் நடித்த பிரபலங்கள் மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய சீரியல் ஒன்றின் பூஜை இன்று நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.


'சொக்கத்தங்கம்' என்ற பெயரில் இந்த புது சீரியல் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு அதில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த ரித்திக் ராகவேந்திரா, காயத்ரி, விமல் குமரன் போன்றோர் கமிட்டாகி உள்ளார்கள்.


பூவா தலையா சீரியல் விரைவில் முடிய இருக்கும் நிலையில், அதில் நடித்து வரும் பாண்டி கமல், ஸ்வேதா ஆகியோரும் இதில் இணைந்துள்ளார்கள். இந்த சீரியலை 18 ரீல்ஸ் நிறுவனம் ப்ரொடக்ஷன் செய்ய இருக்கின்றது.

எதிர்நீச்சல் சீரியலில் நடித்த ஜான்சி ராணி மற்றும் கரிகாலனுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளார்கள். இவர்கள் இருவரும் அந்த சீரியலில் நெகடிவ் கேரக்டர் செய்திருந்தாலும் இவர்களின் நடிப்புக்கு பலர் பாலோவஸாக மாறி உள்ளார்கள். இனி இவர்கள் சொக்கத்தங்கம் சீரியலில் எப்படி நடிக்க போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement