• Dec 27 2024

1500 கோடி வசூலில் மீண்டும் ஆஸ்கர் கதைவை கமல் உடைப்பது கன்ஃபார்ம்! சொன்னது யார் தெரியுமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயங்களில் ஒன்றுதான் இந்தியன் 2. இந்த திரைப்படம் இன்றைய தினம் உலக அளவில் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தில் கமலஹாசன் பல கெட்டப்புகளில் வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த படம் தொடர்பில் தற்போது கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இந்தியன் 2 படத்திற்கான ப்ரொமோஷன்கள் கடந்த ஒரு மாத காலமாகவே படக்குழுவினரும்,  தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தினாலும் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது.


அது மட்டும் இன்றி இந்த படத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக இருந்து கமலஹாசன், சங்கர், சீமான் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து பார்த்து மகிழுந்துள்ளார்கள்.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தை பார்த்த பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் 'மீண்டும் தேசிய விருதை நடிகர் கமலஹாசன் வாங்கப் போகிறார். ஆஸ்கர் கதவை உடைக்க போகின்றார். ஆண்டவருக்கு 5வது தேசிய விருது உறுதி. படத்தின் வசூல் குறித்து எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். படம் கட்டாயம் ரூபாய் 1500 கோடிகளை வசூல் செய்யும்' என பேட்டி கொடுத்துள்ளார். தற்போது இந்த விடயம் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement