• Dec 29 2024

விஷாலின் பெயர சொன்னாலே சும்மா அரங்கம் அதிருதே..! கொளுத்திப் போட்ட ஜாக்குலின்

Aathira / 14 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்றைய தினம் 83 வது நாளில் கால் பதித்து உள்ளது. இன்னும் மூன்று வாரங்களில் இந்த சீசன் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் காத்திருப்பார்கள். அதிலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு பல சுவாரஸ்யமான சம்பவங்களும், காதல் லீலைகளும் இடம்பெற்று இருந்தன.

d_i_a

இந்த நிலையில், பிக்பாஸில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதி உங்களுடைய வீட்டார் ஒருவர் மீது முரண் வைத்து இருப்பாங்க.. அதுல உங்களுக்கு ஏதும் கருத்து வேறுபாடு இருக்கா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


இதன் போது ஜாக்குலின், சௌந்தர்யாவையும் விஷாலையும் கேப்பாங்கன்னு நினைச்சேன் சார் என்று சொன்னதும் அரங்கத்தில் உள்ளவர்கள் கைதட்டி கடுமையாக கூச்சலிட்டார்கள்.

இதைத்தொடர்ந்து ராணவ், என்னையும் ஜாக்குலினையும் சவுண்டையும் சொல்லுவாங்க என்று நினைத்தேன் ஆனால் அவர்கள் முத்துவையும் மஞ்சரியையும் சொன்னது அன்எஸ்பெக்ட்டா இருந்தது என்றார்.

இறுதியில் பேசிய முத்து, குறிப்பிட்டு ஒருத்தர் மீது இல்லாமல் எல்லார் மேலும் ஒரு டவுட் இருந்துச்சு என்று சொல்ல, அப்படி என்றால் நீங்க எல்லாரையும் எதிர்பார்த்தீர்களா என்று விஜய் சேதுபதி கேட்கின்றார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement