• Dec 27 2024

கமல்ஹாசன் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மரணம்.. குடும்பத்தினர் சோகம்.. உதயநிதி இரங்கல்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசனின் தாய்மாமா காலமான நிலையில் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உலகநாயகன் கமல்ஹாசனின் தாய் மாமா சீனிவாசன் என்பவர் இன்று காலை காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 92. தனது தாய் மாமா மறைவு குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:  

எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92-வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா.

இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு இன்றிரவு கொண்டு வரப்படும். நாளை (23-04-24) காலை 10:30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.



அமைச்சர் உதயநிதியும் கமல்ஹாசன் தாய் மாமா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் சாரின் தாய் மாமா திரு.சீனிவாசன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருந்தமுற்றோம்.

திரையுலகம் - அரசியல் இரண்டிலும் கமல் சாருக்கு உற்றத் துணையாக திகழ்ந்த பெரியவர் திரு.சீனிவாசன் அவர்களின் மறைவு, அவர்களுடைய குடும்பத்தினருக்கு பேரிழப்பு.

அவரை இழந்து வாடும் கமல் சார் மற்றும் அவரது குடும்பத்தினர் - நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

Advertisement

Advertisement