சங்கர் இயக்கத்தில் உருவாகி உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஆண்டு பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருந்தாலும் வசூல் கணக்கில் பெரும் வீழ்ச்சியை சந்தித்ததால் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதனால், மூன்றாம் பாகத் தயாரிப்பில் இருந்து லைக்கா நிறுவனம் முழுமையாக விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை காணவில்லை என்றாலும், அந்தக்கதையின் தொடர்ச்சியாக "இந்தியன் 3" உருவாகவுள்ளது. ஆனால், லைக்கா நிறுவனம் மேலும் நஷ்டத்தை சந்திக்க வேண்டாம் என்பதற்காக இப்படத்திலிருந்து பின் வாங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலைமையில், உலகநாயகன் கமல்ஹாசன், தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் முக்கிய பதவியில் உள்ள உதயநிதி ஸ்டாலினை அணுகியிருக்கிறார். அதன் போது, ரெட் ஜெயண்ட் மூலமாக இந்தியன் 3 தயாரிக்குமாறு உதயநிதியிடம் கமல்ஹாசன் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
கமலின் கோரிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் சம்மதித்ததாக சிலர் தெரிவிக்கின்றனர். மேலும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பல வெற்றிப் படங்களை தயாரித்தது மட்டும் இல்லாமல் தரமான படைப்புகளுடன் திரைத்துறையில் செம்மையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!