• Dec 27 2024

விஜய் அரசியலை மறைமுகமாக எதிர்க்கும் 4 முன்னணி நடிகர்கள்.. ரஜினி மட்டும் தான் மனதாரா வாழ்த்தினாரா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை வாயளவில் சிலர் வாழ்த்து தெரிவித்தாலும் 4 முன்னணி நடிகர்கள் அவருக்கு திரைமறைவில் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய், ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த பணத்தை கூட வேண்டாம் என்று விட்டு விட்டு அரசியலுக்கு வர இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அவர் தொடங்கி இருக்கும் நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் தீவிரமாக தனது அரசியல் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க உள்ளார் என்பதும் இதற்காக அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து முடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



விஜய் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தவுடன் திரை உலகை சேர்ந்த பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் ஒரு சில நடிகர்கள் வெளியில் வாழ்த்து தெரிவித்தாலும் உள்ளுக்குள் அவருக்கு எதிர்ப்பாக வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் தனது கட்சிக்கு பெரிய அளவில் ஆதரவு மக்கள் மத்தியில் இல்லாததால், தனக்கு போட்டியாக விஜய் அரசியலுக்கு வந்ததாக அவர் கருதுகிறாராம்.

அதேபோல் நடிகர் விக்ரம், விஜய்யின் நெருங்கிய உறவினராக இருந்தாலும் அவருடைய மகள் கலைஞர் கருணாநிதியின் பேத்தியை திருமணம் செய்து கொண்டிருப்பதால் அவர் திமுகவுக்கு தான் மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பார் என்றும் விஜய் அரசியலை அவர் எதிர்ப்பார் என்று கூறப்படுகிறது

ஜெயம் ரவி ஏற்கனவே சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர்கள் நடிகர்களின் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்று கூறியது விஜய்க்கு மறைமுகமாக தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் நடிகர் சத்யராஜ், விஜய்யுடன் பல திரைப்படங்களில் நடித்து விஜய்க்கு நெருக்கமானவராக இருந்தாலும் அவர் திமுகவின் ஆதரவாளர் என்பதால் விஜய் அரசியலை அவர் ரசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் கமல்ஹாசன், விக்ரம், ஜெயம் ரவி, சத்யராஜ் என நான்கு நடிகர்களும் வெளியில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தாலும் உள்ளுக்குள் அவரது அரசியலை எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினி, விஜய் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என மனதார வாழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement