• Dec 26 2024

ஜீ தமிழ் ‘கனா’ சீரியல் நடிகைக்கு இன்று டும் டும் டும்.. மாப்பிள்ளையுடன் மணக்கோல புகைப்படங்கள்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் சேனலில் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வரும் ‘கனா’ சீரியலில் நடித்த நடிகைக்கு இன்று திருமணம் ஆகி உள்ள நிலையில் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘கனா’ என்ற சீரியல் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் இதில் தர்ஷனா அசோகன் என்பவர் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார் என்பதும் அவர் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார் என்பதையும் பார்த்தோம்.


 
இந்த நிலையில் தர்ஷனா அசோகன் இன்று அபிஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
தர்ஷனா அசோகன் சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்தாலும் அடிப்படையில் அவர் ஒரு பல் மருத்துவர். இந்த நிலையில் அவரை திருமணம் செய்திருக்கும் அபிஷேக் என்பவரும் ஒரு பல் மருத்துவர் தான் என்றும் திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒரு கிளினிக் ஓபன் பண்ண இருப்பதாக கூறப்படுவதால் தர்ஷன் அசோகன் மீண்டும் நடிக்க வர வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.



திருமணம் குறித்த புகைப்படங்களை தர்ஷனா அசோகன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. மேலும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement