• Dec 26 2024

ரகசியத் திருமணம் செய்த கனகா, தோல்வியில் முடிந்த திருமண வாழ்க்கை- பயில்வான் ரங்கநாதன் சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்மான நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா.இவர் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார். இருப்பினும் சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியே வாழ்ந்து வருகின்றார்.

விரலுக்கேத்த வீக்கம் படத்திற்கு பிறகு சினிமாவில் தென்படாமல் இருந்த கனகா, அண்மையில் நடிகை குட்டி பத்மினியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய பல ஆண்டுகளுக்கும் மேலாக பாழடைந்த வீட்டிற்குள்யே வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்த வந்தார் கனகா. அண்மையில் அவர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது கூட,மீடியாக்கள் முன் தன் முகம்வராமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருந்தார்.


அண்மையில் குட்டி பத்மினி,கனகாவின் வீட்டிற்கு சென்று அவரின் வீட்டு வாசலில் பல மணிநேரம் காத்திருந்து அவருடன் பேசி புகைப்படத்தை எடுத்தார். அதன் பிறகு இணையத்தில் நடிகை கனகா பற்றிய தகவல் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.இந்த நிலையில்  பயில்வான் ரங்கநாதன் அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார்.

அதில், கரகாட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமான கனகா, பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்தார். அவர் பல டாப் நடிகர்களுடன் நடித்த போதும், கமலுடன் நடித்ததே இல்லை. அதற்கு காரணம் அவர் மூத்த நாயகன் என்பதால் கனகாவின் அம்மா அவருடன் நடிக்க சம்மதிக்கவில்லை என்றார். மேலும், இவர்,கலிபோர்னியாவைச் சேர்ந்த இன்ஜினியர் முத்துக்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்டது யாருக்குமே தெரியாது, அதை மிகவும் ரகசியமாக வைத்து இருந்தார். இந்த நேரத்தில் தாய் தேவிகா இறந்துவிட்டதால், ஆழ்வார்பேட்டை வீட்டில் தனிமையில் வாழ்ந்தார். இவர் தனிமையில் இருப்பதால் பத்திரிக்கையாளர்கள் கனகாவை பேட்டி எடுக்க சென்றோம்.


அப்போது பேசிய கனகா, கலிபோர்னியாவை சேர்ந்தவரை நான் ரகசியமாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால், திடீரென்று அவர் என்னை விட்டு கலிபோர்னியா சென்றுவிட்டார் என்றார். அப்போது, பத்திரிகையாளர்கள் அவரின் புகைப்படத்தை கொடுங்கள், காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று கேட்டோம். அதற்கு கனகா, வாழ மனம் இல்லாமல் போனவர் மீது புகார் கொடுத்து என்ன பயன், அதற்கு நான் தனியாகவே இருந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். காதல் தோல்வியால் பல ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கனகா அந்த சிறையை விட்டு வெளியில் வர வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement