பிரபல நடிகர் காத்திக் மகன் கெளதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இருப்பினும் ரசிகர்களால் வரவேற்கப்படும் அளவிற்கு எந்த படமும் அமையமையால் நடிப்பிற்கு சிறிது காலம் ஒய்வு கொடுத்தார். மீண்டும் காம்பேக் கொடுக்கும் இவர் "கிரிமினல்", mr x போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது கெளதம் கார்த்திக் தனது பெயரை கெளதம் கார்த்திக்கில் இருந்து கெளதம் ராம் கார்த்திக் என மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவரை தற்போது எல்லோரும் ஜி .ஆர்.கே என அழைத்து வருவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இவர் தற்போது தனது பெயர் மாற்றம் ஒரு பாசிடிவ் நிலையினை கொடுத்துள்ளதாக அவர் நம்புவதாக தெரியவந்துள்ளது. ஜெயம் ரவியின் பின்னர் இவரும் தனது பெயரை மாற்றி இருப்பது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
Listen News!