• Dec 26 2024

விஜய்யால் பாஜகவுக்கு பாதிப்பு இருக்காது, இந்த 2 கட்சிகளும் காலி.. கஸ்தூரி கணிப்பு..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

 தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி இருப்பதை அடுத்து அவரது கட்சி பெரும் வாக்குகளால் எந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற  வாக்குவாதம் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது

குறிப்பாக விஜய்க்கு இளைஞர்கள் வாக்குகள் தான் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இளைஞர்கள் வாக்குகளை அதிகம் கவர்ந்து வைத்துள்ள சீமானுக்கு பாதிப்பு ஏற்படும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் விஜய் என்னதான் பொட்டு வைத்துக்கொண்டு தனது பெயரில் உள்ள ஜோசப் என்பதை மறைத்து கொண்டாலும் அவருக்கு இந்துக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும், பாஜகவுக்கு விஜய்யால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் நடிகை கஸ்தூரி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


அவரது குறி சிறுபான்மையினர் வாக்குகளாக தான் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படி என்றால் சிறுபான்மையினர் வாக்குகளை தற்போது மொத்தமாக அள்ளிக் கொண்டு வரும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் தான் அதிகம் விஜய்யால் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  குறிப்பாக திமுக கூட ஓரளவு சமாளித்து விடும் ஆனால் காங்கிரஸ் கட்சி வாக்குகளை விஜய் கபளீகரம் செய்து விடுவார் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

மேலும் ஒரு நல்ல அரசியல்வாதி நம்மை வழிநடத்த வரமாட்டானா என பல ஆண்டுகளாக மக்கள் ஏங்கி கொண்டிருக்கின்றனர் என்று கூறிய கஸ்தூரி, சினிமா பிரபலத்தை மட்டும் நம்பி அரசியலில் இறங்குவது தவறு என்றும் கூறியுள்ளார்.  சினிமாக்காரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமே வாக்களித்து இருந்தால் விஜயகாந்த் முதலமைச்சர் ஆகியிருப்பார் என்றும் குறைந்தபட்சம் கமலஹாசன் ஒரு எம்எல்ஏ ஆகியிருப்பார் என்றும் கூறிய கஸ்தூரி, சினிமா பிரபலத்தையும் தாண்டி மக்கள் மனதையும் கவர வேண்டும், அதற்கு விஜய் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement