• Dec 27 2024

அக்கா அடுத்து கயித்துமேல நடப்பாங்க.. தலைகீழாக நின்ற கீர்த்தியை கிண்டலடிக்கும் ரசிகர்கள்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி சுரேஷ் தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தியில் நடித்து வருகிறார் என்பதும் விஜய் நடித்த  ’தெறி ’படத்தின் ரீமேக் படமான ‘பேபி ஜான்’ என்ற படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. அது மட்டும் இன்றி தமிழில் அவர் ’ரகு தாத்தா’ ’ரிவால்வர் ரீட்டா’ ’கன்னிவெடி’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு இந்த நான்கு படங்களும் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாவில் 17 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் அப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்று முன் அவர் தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட் குவிந்து வருகிறது.

’அடுத்தது கீர்த்தி அக்கா கயித்து மேல நடப்பார்’ என்று ஒருவரும், ’பேமஸ் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது கீர்த்திக்கு தெரியும்’ என்று இன்னொருவரும் கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர். மேலும் ’கீர்த்தி சுரேஷ் இயற்கையான அழகு உடையவர்’ என்று ஒரு சிலரும் பதிவு செய்து வருகின்றனர். ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் பதிவு செய்த இந்த வீடியோவுக்கு சுமார் 3 லட்சம் லைக் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement