தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது இயற்கையான நடிப்பு மற்றும் தனித்துவமான ஸ்டைலால் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார். தற்போது, அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷ், சிறிய குழந்தையுடன் தானும் குழந்தை மாதிரி விளையாடும் கியூட்டான தருணங்களைப் பகிர்ந்துள்ளார்.
இப்பொழுது அந்த வீடியோவைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் "கீர்த்தி சுரேஷின் இன்னொரு அழகான பக்கம் இதுவா?" என்று வியப்புடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே தனது தனிப்பட்ட வாழ்க்கையை மென்மையாகக் கையாளும் கீர்த்தி, ரசிகர்களிடம் தனது நேர்த்தியான குணத்தால் அதிகளவு பாசத்தினை சம்பாதித்து வந்தவர்.
இந்த வீடியோ வைரலானதும் ரசிகர்கள் "கீர்த்தி சுரேஷ் குடும்ப வாழ்க்கையை எப்போது தொடங்கப்போகிறார்?" என்ற கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர். மேலும், இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர் ரொம்பவே அழகாகவும் கியூட்டாகவும் இருக்கின்றார் எனப் பாராட்டி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவில் இவரது முகம் வழமைக்கு மாறாக மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதனையும் காணமுடிகின்றது.
Listen News!