நடிகர் வருண் தவான், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து நேற்று ஹிந்தியில் ரிலீசான திரைப்படம் பேபி ஜான். கிருஸ்துமஸ் முன்னிட்டு வெளியான இதன் முதல் நாள் வசூல் குறித்து பார்ப்போம்.
இயக்குநர் அட்லீ தயாரித்து இருக்கும் இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி ஆகியோர் நடித்து இருக்கின்றனர். இந்த திரைப்படம் நடிகர் விஜய் மற்றும் சமந்தா நடித்து வெளியாகி தமிழில் ஹிட் அடித்த திரைப்படம். இதன் ரீமேக் தான் பேபி ஜான். இந்நிலையில் முதல் நாளில் பேபி ஜான் படம் பெற்ற வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது.
முதல் நாளில் 12.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படம் நேற்று ஹிந்தியில் மட்டும் 20.7 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. முதல் நாளில் கொஞ்சம் சரிந்தாலும் இனி வரும் நாட்களில் வசூலிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
Listen News!