• Dec 26 2024

பாட்டி வடை சுட்டதை 10 எபிசோட் எடுத்து வச்சிருக்காங்க: லால் சலாமை கலாய்த்த பிரபலம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் ஊடகங்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.  ஆனால் ஒரு ரஜினி படத்திற்கு உள்ள ஓபனிங் வசூல் இல்லை என்றாலும் ஓரளவு திருப்திகரமான வசூல் பெற்று வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்  யூடியூப் பிரபலம் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்பவர் ’லால் சலாம்’ படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ரஜினியின் கேரக்டர் சூப்பராக இருப்பதாகவும்  இன்றைய காலகட்டத்தில் தேவையானதை அவர் வசனமாக பேசி இருப்பதாகவும் பாராட்டிய அவர், ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சுமாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.



மேலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பு சூப்பராக இருப்பதாகவும் அதேபோல் தம்பி ராமையா மற்றும் செந்தில் கேரக்டர்கள் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இயக்குனர் ஐஸ்வர்யாவை அவர் கொஞ்சம் கடுமையாக விமர்சித்துள்ளார்.  இந்த படத்தில் ஐந்தாறு கதைகள் இருக்கிறது என்றும் அந்த கதைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அவரால் கொண்டு செல்ல முடியாத நிலையை பார்க்க முடிகிறது என்றும் ஒரே கதையாக சுருக்கி ட்ரிம் பண்ணி இருந்தால் படம் நன்றாக இருக்கும் என்றும் மொத்தத்தில் பாட்டி வடை சுட்ட கதையை 10 எபிசோடுகளாக எடுத்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த படம் இருக்கிறது என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

இந்த படத்தின் திரைக்கதை குழப்பமாக இருப்பதாக பல திரை விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருந்தாலும் நார்மல் ஆடியன்ஸ்கள் இந்த படத்தை வரவேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement