• Dec 26 2024

மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் லெஜெண்ட் பட நடிகை... அதிர்ச்சில் ரசிகர்கள்...

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஊர்வசி. இவர் கிங்ஸ் ஆப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் . கடந்த 2022 -ம் ஆண்டு சரவணன் அருள் நடிப்பில் வெளிவந்த லெஜெண்ட் படத்தில் ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

தி லெஜெண்ட்' பட ஹீரோயினுக்கு இவ்வளவு சம்பளமா? ரசிகர்கள் அதிர்ச்சி | Tamil  cinema the legend movie heroine salary fans shocked

இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படத்தில் ஊர்வசி ரவுத்தலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் பாபிதியோல் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். 

நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம்.. ட்ரோலில் சிக்கிய லெஜண்ட் பட நடிகை | Tamil  cinema urvashi rautela claims she charges one crore for one minute

இந்த படத்தின் ஒரு சண்டைக் காட்சியை ஐதராபாத்தில் படமாக்கிய போது, ஊர்வசி ரவுத்தலா விபத்தில் சிக்கினார். அவருக்கு பலத்த காயமும், எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விடையம் தற்போது வைரலாகி வருகிறது. இவரின் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளனர். 

Advertisement

Advertisement