• Dec 27 2024

மாடல் உடுப்பில் ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த லியோ ஜனனி! அட்டகாசமான போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

இலங்கைப் பெண்ணான ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலராலும் அறியப்பட்ட ஒரு பிரபலமாக மாறினார். இவர் ஆரம்பத்தில் பிரபல செய்தி ஊடகம் ஒன்றில் பணியாற்றினார். அத்துடன் மாடலிங் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவராக காணப்படுகின்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்பட்டனர். இவருடைய குழந்தைத்தனமான பேச்சும் சுட்டித் தனமான செயலும் பலரையும் ஈர்த்தது. பிக் பாஸ் டைட்டிலை இவர் வெற்றி பெறா விட்டாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளார் ஜனனி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு ஜனனிக்கு  அதிர்ஷ்டம் அடித்தது போல முதலாவது படமே விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி விஜய் - த்ரிஷா நடித்த லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆரம்பமே முன்னணி நடிகர்களுடன் நடித்தது ஜனனிக்கு மிகப்பெரிய பாராட்டை பெற்றுக் கொடுத்தது.


எனினும் இதைத்தொடர்ந்து எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருக்கின்றார் ஜனனி. சமீபத்தில் இவருடைய ஆல்பம் சாங் ஒன்று வெளியானது. அதில் ரொம்பவும் க்யூட்டாக இருந்தார். அடிக்கடி போட்டோ ஷூட் செய்வதையும் வழமையாகக் கொண்டுள்ளார். ஆனாலும் இவர் ஏனைய நடிகைகளை போல் அல்லாமல் மிகவும் அடக்க ஒடுக்கமாகவே தனது ஆடைகளை அணிந்து வருகின்றார்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் ஜனனி மாடல் உடுப்பில் அட்டகாசமான போட்டோஸ் செய்துள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டா  பக்கத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Advertisement