• Dec 28 2024

TTF வாசன் ஆம்பளையா இருந்தா நேர்ல வரட்டும்.. சவால் விட்டு சீண்டிய இயக்குனர்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் உள்ள பலரும் தற்போது சமூக வலைத்தள ஊடகங்களில் உள்ள ஆப்ஸ்கள் மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டி ஏராளமான  ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார்கள். மக்களிடம் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காகவே இணையத்தை  பயன்படுத்துபவர்களும் உண்டு. அதன் பின்பு தமிழ் சினிமாவில்  காலடி எடுத்து வைப்பதிலும் மிக இலகுவான தன்மையை கையாண்டு வருகின்றார்கள். 

அதன்படி தனது பைக் ஓட்டும் திறமையின் மூலம் அதனை தனது youtube சேனலில் பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் டிடிஎப் வாசன். இவர் சர்ச்சைகளுக்கும் பிரபலமானவர். டிடிஎஃப் வாசன்  மஞ்சள் வீரன் படத்தில் நடிக்க கமிட் ஆனார். ஆனால் கடந்த சில நாட்கள் முன்பு படத்தின் இயக்குனர் அவரிடம் சொல்லாமலேயே மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கியிருந்தார். இது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2021 ஆம் ஆண்டு மஞ்சள் வீரன் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் டிடிஎஃப் வாசன் ஹீரோவாக அறிமுகம் ஆனார். எனினும் கடந்த சில வாரத்தில் செய்தியாளரை சந்தித்த இயக்குனர், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டார் என்று கூறினார். அதன் பின்பு பேசிய டிடிஎஃப் வாசன்,  இயக்குனர் தன்னை அந்த படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது. என்னிடம் ஒருமுறை கூட அவர் பேசவில்லை. மேலும் மஞ்சள் வீரன் படத்திற்கு போட்டோசூட் மட்டுமே நடந்தது. பட பூஜைக்கு கூட நான் தான் பணம் செலவு பண்ணினேன் என்று தெரிவித்தார்.


இந்த நிலையில், இயக்குனர் செல்அம் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், டிடிஎஃப் வாசனுக்கு திராணி இருந்தால், ஆம்பளையாக இருந்தால் நேரில் வரச் சொல்லுங்கள். நான் இறங்குகின்றேன். அனைத்து மீடியாக்களையும் கூப்பிட்டு ஒரு தேதியை சொல்லி அனைவர் முன்னாலும் பேசிவிடலாம். போனில் பேசுவது தமிழ்நாட்டில் இல்லாமல் வேறு எங்கோ இருந்து கொண்டு பேசுவது இவை எதுவும் வேண்டாம் எனக்  கூறியுள்ளார். 

எனவே இயக்குனர் செல் அமின் இந்த சவாலுக்கு டிடிஎஃப் வாசன் எப்படி பதிலடி கொடுக்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement