• Dec 26 2024

அதிரடியாய் வெளியான கேப்டன் மில்லர்... டுவிட்டரில் தெறிக்கும் விமர்சனங்கள்... படம் எப்படி இருக்கு வாங்க பார்ப்போம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், அதிதி பாலன், சுந்தீப் கிஷன், எட்வர்ட் சோனென்ப்ளிக் மற்றும் ஜான் கோக்கன் ஆகியோர் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. படம் எப்படி இருக்கிறது என பார்ப்போம் வாங்க.


தனுஷ் நடித்த ' கேப்டன் மில்லர் ' இன்று (ஜனவரி 12) பெரிய திரைகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.  மேலும் பான்-இந்திய நாடகம் உலகளவில் 1600 திரைகளுக்கு மேல் வெளியிடப்பட்டது. பீரியடிக் டிராமாவில் தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் அதிகாலைக் காட்சிகள் உள்ளன, அதே நேரத்தில் படத்தின் FDFS சொந்த மாநிலத்தில் காலை 9 மணிக்குத் தொடங்கியது. ரசிகர்கள் தங்களின் அபிமான நட்சத்திரத்திற்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். 


இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி செய்யும் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ராணுவ படையில் பணியாற்றும் தனுஷ், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய மக்களுக்கு செய்யும் அநீதியை கண்டு இந்திய மக்களுக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவது தான் இப்படத்தின் கதைக்கரு. 


போர் படமாக உருவாகி உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் டிரெய்லரில் கேட்டதை விட அதிக வேட்டுச் சத்தம் ஒவ்வொரு தியேட்டரிலும் இந்த பொங்கலுக்கு கேட்கப் போவது உறுதி. அந்த அளவுக்கு ஆக்‌ஷன் நிறைந்த காட்சிகளை கொண்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதே ஆச்சர்யமான விஷயம் தான்.


ஆக்‌ஷனை தாண்டி வலி நிறைந்த ஒரு எமோஷனல் டிராமா மற்றும் எளிய மக்களை அந்நியர்கள் கொடுமைப்படுத்திய சுதந்திர போராட்டக் கதையாக இந்த படம் உருவாகி உள்ள நிலையில், நிச்சயம் ஒட்டுமொத்த மக்களையும் படம் கனெக்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சகர்கள் கொடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement