• Dec 27 2024

'வாழ்க்கை வாழ்வதற்கு தான்..' தன்னை அசிங்கப்படுத்தியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த ஷீத்தல்! வைரலான பதிவு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். இவர் தனது முதல் மனைவி உடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியாவை சேர்ந்த  24 வயது நிரம்பிய ஷீத்தல் என்பவருடன் உறவில் இருந்தார். 

தன்னை விட 27 வயது குறைவான பெண்ணுடன் பப்லு பிரித்விராஜ் உறவில் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு பிரித்விராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள்.


என்னுடைய வாழ்க்கையில் நிறைய ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். இனி மேலும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள் என்று அர்த்தம். இப்போது தான் எல்லாம் எனக்கு புரிகிறது என தாங்கள் பிரிந்ததை பட்டும் படாமல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தன்னைப் பற்றி பரவி வரும் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

அதில் 'கடந்த காலத்தை நினைத்து வருந்தி கொண்டிருப்பதோ எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதோ வாழ்க்கை இல்லை.... வாழ்க்கை வாழ்வதற்கு தான்..' என்று ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். 

இதன்மூலம் பப்லுவை பிரிந்ததற்கான காரணம் குறித்தும் அவர் தன்னைப் பற்றி இணைய பக்கத்தில் அசிங்கமாக பேசி வருபவர்களை குறித்தும் ஷீத்தல் வருத்தப்படவில்லை என்பது தெரிகிறது.

 

Advertisement

Advertisement