• Dec 26 2024

புரட்டி போட்டதில் கனெக்சன் ஆகிருச்சோ.. சிஎஸ்கே மேட்ச் பார்க்க ஒன்றாக வந்த லோகி-ஸ்ருதிஹாசன்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த ’இனிமேல்’ என்ற ஆல்பத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த ஆல்பத்தின் முழு பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆல்பத்தின் டீசரிலேயே லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆகி இருந்தது என்பதும் குறிப்பாக சோபா பெட்டில் இருவரும் படுத்து புரண்ட காட்சியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஆல்பத்தின் ஒர்க் அவுட்டான கெமிஸ்ட்ரி நிஜத்திலும் ஒர்க் அவுட் ஆகிவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படும் வகையில் லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் அணியின் மேட்சை பார்க்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வந்திருந்தனர்.

லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற நிலையில் அவர் தனது மனைவி குழந்தைகளை அழைத்து வராமல் ஸ்ருதிஹாசனை மேட்ச் பார்க்க அழைத்து வந்ததுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும் இருவரும் நட்பு முறையில் ஒன்றாக ஸ்டேடியத்திற்கு வந்திருக்கலாம் என்றும் இதில் தவறாக ஒன்றும் இருக்காது என்றும் ரசிகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement