• Dec 26 2024

புத்தி கெட்டு திரியுங்க.. அப்ப தான் புத்தி வரும்..! விஜய் பட நடிகருக்கு திடீர் ஞானம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

'துள்ளுவதோ இளமை' என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் இயக்குநர் செல்வராகவன்.

இதை தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஓருவன், மயக்கம் என்ன என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்தார்.

அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தையும் இவர் இயக்கியதோடு, பீஸ்ட், சானி காகிதம் போன்ற படங்களில் நடித்தும் உள்ளார்.

இவர் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டாலும் , பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து கொண்டார்.


இதனைத் தொடர்ந்து தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த கீதாஞ்சலியை 2011ஆம்ஆண்டு இரண்டாவது திருமணம் செய்த இவர்களுக்கு, தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.


இந்த நிலையில், அவர் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், ஐயோ இப்பொழுது தெரிகின்ற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே! என ஒருபோதும் கலங்காதீர்கள். புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும். இந்த நொடிதான் பிறந்தது போல நினைக்கத் தொடங்குங்கள் என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement