விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லொஸ்லியா. இவர் இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அதன் பின்பு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக சென்னைக்கு புறப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் லொஸ்லியா கலந்து கொண்டார். இதன்போது கவின், சாண்டி மாஸ்டர் ஆகியோரது கூட்டணியில் இவர்களுடைய நட்பு பலராலும் வியக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டு ரசிகர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றார் லொஸ்லியா.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது இவருக்கும் கவினுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதன்போது லொஸ்லியாவை பார்க்க பிக்பாஸில் நுழைந்த அவருடைய அப்பா, காதல் விவகாரத்தில் அவரை கண்டித்த விதம் பலரையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தது. அதன் பின்பு கவினின் காதலும் பிக்பாஸ் நிகழ்ச்சி உடனே முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப் ஆகிய படங்களில் நடித்தார். ஆனாலும் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. அதன் பின்பு மாடலிங், போட்டோ சூட் எடுப்பது, விளம்பரங்களில் நடிப்பது, ஆல்பம் சாங் என்று தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்த நிலையில், நடிகை லொஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அதில் அவர் சாரி கட்டி கேஷுவலாக போட்டோ ஷூட் செய்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!